சுசீந்திரன் படத்தில் சூரி மகன்!

நெஞ்சில் துணிவிருந்தால் படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கி வரும் ஏஞ்சலினா படத்தில் முக்கிய கேரக்டரில் சூரியின் மகன் நடித்திருக்கிறார்.
தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் நடித்து கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவுள்ள டிக்டிக்டிக் படத்தில் ஜெயம் ரவியின் மகன் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். அந்த வரிசையில் நடிகர் சூரியின் மகனும் சுசீந்திரனின் ஏஞ்சலினா படத்தின் மூலம் திரைத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார்.