மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சிலை கடத்தல் வழக்கு : அரசுக்கு எச்சரிக்கை!

சிலை கடத்தல் வழக்கு : அரசுக்கு எச்சரிக்கை!

சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு அவர்களது பணிகளை மேற்கொள்ள உரிய வசதிகள் செய்து தரப்படுகிறதா? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிலைக் கடத்தல் தொடர்பான வழக்கு ஒன்றில் அனைத்து வழக்குகளையும் ஐஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான குழுவே விசாரிக்க வேண்டும், அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று கடந்த ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டிருந்தார்.

தற்போது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சிலை மாயம் மற்றும் தங்கமில்லாத சிலை செய்து மோசடி உள்ளிட்ட வழக்குகளைச் சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இன்று (ஜனவரி 4) சிலை கடத்தல் வழக்கு ஒன்று நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் பிரிவினருக்கு அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும் என்று உத்தரவிட்டு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் செய்து தராதது ஏன்? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

போலீசாருக்கு வசதிகளைச் செய்து தராவிட்டால் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றப்படும் என்று எச்சரித்த நீதிபதி உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை. என்றால் தமிழக அரசு செயலிழந்து விட்டதா? என்று சாடியுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் இந்து சமய அறநிலையத்துறை இயக்குநர், தலைமைச் செயலாளர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர நேரிடும் , அல்லது மூன்று பேரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரித்து வழக்கை வரும் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். .

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 4 ஜன 2018