மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சர்க்கரை உற்பத்தி 26% உயர்வு!

சர்க்கரை உற்பத்தி 26% உயர்வு!

கடந்த அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 26 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம் (இஸ்மா) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்மா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2016-17ஆம் நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 81.91 லட்சம் டன் அளவிலான சர்க்கரை உற்பத்தியாகியிருந்த நிலையில், நடப்பு 2017-18 நிதியாண்டின் அக்டோபர் - டிசம்பர் மாதங்கங்களில் 26 சதவிகித உயர்வுடன் 103.26 லட்சம் டன் அளவிலான சர்க்கரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. 2016 அக்டோபர் - டிசம்பரில் உத்தரப் பிரதேசத்தில் 26.78 லட்சம் டன்னாக இருந்த சர்க்கரை உற்பத்தி, 2017 அக்டோபர் - டிசம்பரில் 38.80 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. அதேபோல, மகாராஷ்டிர மாநிலத்தில் சர்க்கரை உற்பத்தி 25.35 டன்னிலிருந்து 38.24 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சர்க்கரை உற்பத்தியாகின்றன. பிற மாநிலங்களான கர்நாடகாவில் 16.17 லட்சம் டன்னும், குஜராத்தில் 3.70 லட்சம் டன்னும், ஆந்திரப் பிரதேசத்தில் 1.90 லட்சம் டன்னும், தமிழகத்தில் 1.70 லட்சம் டன்னும், பீஹாரில் 1.65 லட்சம் டன்னும், ஹரியானாவில் 1.80 லட்சம் டன்னும், பஞ்சாபில் 1.60 லட்சம் டன்னும், உத்தராகண்டில் 1.20 லட்சம் டன்னும், மத்தியப் பிரதேசத்தில் 1.30 லட்சம் டன்னும் உற்பத்தியாகியுள்ளது. இந்தியாவின் சர்க்கரை நுகர்வு 250 லட்ச டன்னாக இருக்கும் எனவும், அதற்கேற்ப உற்பத்தி 251 லட்சம் டன்னாக இருக்கும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018