மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

அமெரிக்காவை எதிர்கொள்வதில் வடகொரியா வெற்றி!

அமெரிக்காவை எதிர்கொள்வதில் வடகொரியா வெற்றி!

அமெரிக்காவை எதிர்கொள்வதில் வடகொரியா வெற்றி பெற்றிருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டமொன்றில் தெரிவித்திருக்கிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் வுன்னுக்கும் எப்போதும் ஏழாம்பொருத்தம் தான். சமீபத்தில், தனது நாற்காலியில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், அமெரிக்காவில் அனுகுண்டு வெடிக்கும் என்று சர்ச்சையைக் கிளப்பினார் கிம் ஜோங் வுன். அதைவிட பெரிய பட்டன் என்னிடம் இருக்கிறது என்று அதற்குப் பதில் சொல்லியிருந்தார் ட்ரம்ப். இவர்களது வார்த்தைப்போர் சர்வதேச அரசியலில் உற்றுநோக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட கூட்டத்தில், வடகொரியா பற்றி கருத்து தெரிவித்தார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன். “அமெரிக்காவுக்கு எதிரான நிலைப்பாடுகளை வெகு தீவிரமாகப் பின்பற்றி வருகிறது வடகொரியா. அமெரிக்காவினால் தரப்படும் அழுத்தங்களை அனாயாசமாக அந்நாடு கையாள்கிறது” என்று பாராட்டினார். இந்த விஷயத்தில், சீனாவையே வடகொரியா மிஞ்சியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த மாதம் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், வட கொரிய அதிபர் கிம் ஜோங் வுன்னின் படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது. இதனைக் கிண்டல் செய்து, பாஜகவை சேர்ந்த சம்பித் பத்ரா என்பவர் ட்விட்டரில் கருத்து சொல்லியிருந்தார். அதில், “தனது எதிரிகளின் கொலைக்களமாக, அவர்கள் கேரளாவை மாற்றி வருகிறார்கள். அதனால் கிம் ஜோங் வுன்னை பாராட்டியதில் ஆச்சர்யமில்லை. இடதுசாரிகள் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அலுவலங்கள் மீது ஏவுகணைகள் பாய்ச்ச திட்டமிட மாட்டார்கள் என நம்புகிறேன்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018