மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

எய்ம்ஸ் அமைக்காதது ஏன்?

எய்ம்ஸ்  அமைக்காதது ஏன்?

தமிழகத்தில் இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-2016 ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த நிலையில், இதுவரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடம்கூடத் தேர்வு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (ஜனவரி 4) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்) மருத்துவமனை 2000 கோடி ரூபாயில் அமைக்கப்படும்" என்று 2015-2016 ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட ஆரவாரமான அறிவிப்பு இன்னும் கிடப்பில் போடப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நடவடிக்கையின்றி நிலுவையில் இருப்பது ஏன் என்பதும் புரியாத புதிராக இருக்கிறது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், "2017 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும்" என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுவிட்டது. ஆனால், இன்றுவரை தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவதற்கான இடத்தை மத்திய - மாநில அரசுகள் இறுதி செய்யவில்லை.

"ஜார்கண்ட் மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்", என்று 2017-18ஆம் ஆண்டு மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு செயல்வடிவம் பெற்றுவிட்ட நிலையில், தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் அமைக்கப்படாமல் இருப்பதற்கு மத்திய - மாநில அரசுகள் நடத்தும் நாடகமே காரணம்" என்றும் குற்றம் சாட்டினார் ஸ்டாலின்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018