மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

திருட்டினைத் தடுக்கும் ஸ்மார்ட் லைட்!

திருட்டினைத் தடுக்கும் ஸ்மார்ட் லைட்!

கலிபோர்னியா நாட்டினை சேர்ந்த Hauteworks என்ற நிறுவனம் மிதிவண்டியில் பொருத்திக்கொள்ளும் புதிய ஸ்மார்ட் லைட் ஒன்றினை கண்டறிந்துள்ளது.

ரையோ (rayo) என பெயரிடப்பட்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் லைட் மிதிவண்டிகளைப் பயன்படுத்தி வரும் பயனர்களுக்காகப் பிரத்யேகமாகக் கண்டறியப்பட்டுள்ளது. காரணம் மிதிவண்டியில் பொருத்திக்கொண்டு அதன் அசைவிற்கு ஏற்றாற்போல் செயல்படும் வகையில் இந்த ஸ்மார்ட் லைட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிதிவண்டியில் செல்லும் நபரின் அசைவுகளையும், அவர் மெதுவாகச் செல்கிறாரா அல்லது வேகமாகச் செல்கிறாரா, பிரேக் போடுகிறாரா போன்றவற்றினை பின்னால் வருபவர்களுக்கு செய்கைகளாகக் காண்பிக்க இந்த லைட்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் திருடர்களிடமிருந்து மிதிவண்டிகளைப் பாதுகாக்க இதில் ஸ்மார்ட் லாக் என்ற வசதியும் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பயனர் மிதிவண்டியை லாக் செய்துவிட்டுச் சென்ற பின்னர் எவரேனும் அதனை நகர்த்த முயற்சி செய்யும் பொழுது, பயனருக்கு எச்சரிக்கை தகவல் அனுப்பப்படுகிறது.இந்த ஸ்மார்ட் லைட் வாட்டர் புரூப் என்பதால் நீர் மேலே படுவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது.

மிதிவண்டிகளின் பயன்பாடு பெரும்பாலும் இந்தியாவில் குறைந்துள்ளது. இருப்பினும் இரவினில் பள்ளி சென்று திரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த ஸ்மார்ட் லைட் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018