மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

பாட்ஷாவிலிருந்து பாலிடிக்ஸ் வரை!

பாட்ஷாவிலிருந்து பாலிடிக்ஸ் வரை!

அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த், திமுக தலைவர் கருணாநிதியைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனை அவரது இல்லத்தில் சந்தித்து ஆசி பெற்றார்.

தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்றும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் அறிவித்திருந்தார். இதனால் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆன்மிக அரசியலே தனது நோக்கம் என்று தெரிவித்த ரஜினி ஜனவரி 1ஆம் தேதி ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கவுதமானந்தாவைச் சந்தித்து ஆசி பெற்றார். தொடர்ந்து நேற்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார். இதுபோலவே பல்வேறு முக்கியத் தலைவர்களையும் ரஜினி சந்திப்பார என்ற தகவல் வெளியானது.

முன்னாள் அமைச்சரும், தன்னை வைத்துப் பல திரைப்படங்களைத் தயாரித்தவருமான ஆர்.எம்.வீரப்பனின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று ஆசி பெறுவதை ரஜினிகாந்த் வழக்கமாக வைத்துள்ளார்.

கட்சி தொடங்கவுள்ள நிலையில், இன்று (ஜனவரி 4) ஆர்.எம்.வீரப்பனிடம் ஆசி பெற வள்ளுவர் கோட்டத்திலுள்ள அவரது இல்லத்துக்குச் சென்ற ரஜினியை வரவேற்று அழைத்துச் சென்றார் ஆர்.எம்.வீரப்பன். அவருக்கு ரஜினி பொன்னாடை அணிவித்து வாழ்த்து பெற்றார். இருவரும் சிறிது நேரம் அமர்ந்து அரசியல் நிலவரம் தொடர்பாக விவாதித்தனர். அப்போது ரஜினிக்கு ஆர்.எம்.வீரப்பன் ஆசி வழங்கியதுடன் சில ஆலோசனைகளையும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 1995ஆம் ஆண்டில் தமிழகத்தில் அடிக்கடி குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டிருந்தன. அந்தச் சமயத்தில் ரஜினிகாந்த் நடித்து, சத்யா மூவீஸ் தயாரித்திருந்த பாட்ஷா திரைப்படத்தின் வெள்ளி விழா நிகழ்வும் நடைபெற்றது. அப்போது வீரப்பன் அதிமுக ஆட்சியின் உணவுத் துறை அமைச்சராக பணியாற்றினார். விழா மேடையில் நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் வேகமாகப் பரவிவருகிறது. இதற்கு அரசு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று அரசியல் கருத்து தெரிவித்தார்.

இதனை மேடையில் அமர்ந்திருந்த ஆர்.எம்.வீரப்பன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்த விழாவின் காரணமாக அமைச்சர் பதவியிலிருந்தும், அதிமுகவிலிருந்தும் வீரப்பன் நீக்கப்பட்டார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018