மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மீனவர்களை விடுவிக்க முதல்வர் கடிதம்!

மீனவர்களை விடுவிக்க முதல்வர் கடிதம்!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள 84 மீனவர்களை விடுவிக்கக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கடலுக்குள் மீன் பிடிக்க செல்லும் நாகை, ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். இதனால் அவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று (ஜனவரி 4) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடிக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் 4/1/18 காலை எல்லைத் தாண்டி வந்ததாகக் கூறி 2 படகுகளுடன் 13 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இவர்கள் உட்பட இலங்கை சிறையில் 84 மீனவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.

மீனவர்களுக்குச் சொந்தமான 159 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு பிரதமர் மோடியே நேரடியாகத் தலையிட்டு மீனவர்களை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை அரசால் சமீபத்தில் 79 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுத்த பிரதமருக்கு முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018