மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

வெற்றிவேலுக்கு நிபந்தனை ஜாமீன்!

வெற்றிவேலுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டது தொடர்பான தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

ஆர்.கே நகர் இடைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி, தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது தொடர்பான வீடியோ காட்சி ஒன்றை வெளியிட்டார் . இந்த வீடியோ அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆர்.கே நகர் இடைத் தேர்தல் சமயத்தில் ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்டதால், தேர்தல் அதிகாரி பிரவீண் நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் வெற்றிவேல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையம் சார்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வெற்றிவேல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் கைது செய்யப்படாமலிருக்க முன்ஜாமீன் கோரி வெற்றிவேல் ஏற்கனவே தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் கடந்த டிசம்பர் 27ஆம் தேதியன்று முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வெற்றிவேல் மனுதாக்கல் செய்திருந்தார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018