மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

வெண்கலப் பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்

வெண்கலப் பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த்

சவுதி அரேபியாவில் நடைபெற்ற பிளிட்ஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலப் பதக்கம் வென்றார்.

சில தினங்களுக்கு முன்னர் ரேபிட் முறை செஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த், அதன் தொடர்ச்சியாக பிளிட்ஸ் தொடரில் பங்கேற்றார். முதல் நாளில் ரஷ்ய வீரர் லேன் நேபோநியாசிட்டி உடன் மோதி ஒரு சுற்றில் தோல்வியைத் தழுவினார். அதன் பின்னர் தொடர்ச்சியாக வெற்றிகளைப் பெற்றுவந்த ஆனந்த் கடைசி நாளான நேற்று (ஜனவரி 3) அனைத்துப் போட்டிகளிலும் வெற்றிபெற்று 3ஆவது இடத்திற்கு முன்னேறி வெண்கலப் பதக்கம் வென்றார். இரண்டு நாட்கள் நடந்த இந்தப் போட்டியில், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆனந்த், முதல் நாளில் 11 ஆட்டங்களில் 7 புள்ளிகளைப் பெற்றார். இரண்டாவது நாளில் 10 ஆட்டங்களில் 7.5 புள்ளிகளைப் பெற்றார்.

உலகின் நம்பர் ஒன் வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இந்த தொடரில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். ரஷ்ய வீரர் செர்கே கர்ஜாகின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018