மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஆர்.கே.நகர்: கமல்-தினகரன் மோதல்!

ஆர்.கே.நகர்: கமல்-தினகரன் மோதல்!

விஸ்வரூபம் -2 படத்துக்காக ட்விட்டர் அரசியலுக்கு கொஞ்ச நாள் லீவு விட்டிருந்த நடிகர் கமலஹாசன் இன்று வெளிவந்திருக்கும் தனது வார இதழ் கட்டுரையில், ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி முதன் முதலாக கருத்து தெரிவித்திருக்கிறார். கடந்த டிசம்பர் 21 ஆம் தேதி நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் டிசம்பர் 24 ஆம் தேதியே வந்துவிட்டன. அதுபற்றி தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் விமரிசித்து முடித்துவிட்ட நிலையில் கமல்ஹாசன் இப்போதுதான் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சி ஒரு ஓட்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் பட்டுவாடா செய்தது. சுயமாக வளர்ந்த சுயேச்சை ஒரு ஓட்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை பட்டுவாடா செய்துள்ளார். டோக்கனுக்கு விலை போய்விட்டார்கள் ஆர்.கே.நகர் வாக்காளர்கள்., இது ஜனநாயகத்துக்கு வீழ்ச்சி’’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதுபற்றி செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தினகரன்.

‘’பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்ததாக ஆர்.கே.நகர் மக்களை கமலஹாசன் கேவலப்படுத்துகிறார். ஜனநாயக ரீதியாக என்னை தேர்ந்தெடுத்த மக்களை கமல்ஹாசன் இதுபோல தரம் தாழ்ந்து குற்றம் சாட்டக் கூடாது’’ என்று பதில் தெரிவித்திருக்கிறார் தினகரன்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018