மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!

சிறப்பு ரயில்கள் முன்பதிவு தொடக்கம்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே நேற்றிரவு (ஜனவரி 3) அறிவித்துள்ளது.

தமிழர்களின் பாரம்பரியமான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வந்து பணிபுரியும் மக்கள் பண்டிகைகளின் போது தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவார்கள். அவ்வாறு செல்லும் மக்களில் பெரும்பாலானோர் பயணத்திற்காக ரயில்களைத் தேர்வு செய்வார்கள். அதன்படி, பொங்கல் பண்டிகைக்காக ஜனவரி 12 ஆம் தேதி ரயிலில் பயணம் செய்வதற்கு செப்டம்பர் 15ஆம் தேதியே டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

இந்நிலையில், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக தெற்கு ரயில்வே ‘சுவிதா’ சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் சுவிதா எக்ஸ்பிரஸ் ரயில் ஜனவரி 5, 11, 12, 13, 19 மற்றும் 25 ஆகிய தேதிகளில் இரவு 9.50 மணிக்கு புறப்படுகிறது. அதே போல மறு மார்க்கத்தில் ஜனவரி 15,16,17ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னை எழும்பூருக்கு சவிதா சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படும்.நெல்லையில் இருந்து எழும்பூருக்கு ஜனவரி 7, 28 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும்.

சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன், சிறப்பு ரயில், வைகை விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர், நெல்லை விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், நாகர்கோவில் விரைவு ரயில் உள்ளிட்ட பல ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. அதே போல ஈரோடு, கோவை, சேலம் மாவட்டங்களுக்கும் பல ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சிறப்பு ரயில்களுக்கான டிக்கட் முன்பதிவு இன்று (ஜனவரி ) காலை 8 மணிக்கு தொடங்கியது. அதிக கட்டணம் கொண்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதால், பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

வியாழன் 4 ஜன 2018