மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

அவை முன்னவர் பன்னீர்...அப்செட்டில் செங்கோட்டையன் .

அவை முன்னவர் பன்னீர்...அப்செட்டில் செங்கோட்டையன் .

சட்டப்பேரவையின் அவை முன்னவராகத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனால் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா முதல்வராக இருந்தவரை தமிழக சட்டமன்றத்தின் அவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம் பதவி வகித்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா முதல்வராக ஆசைப்பட்டதால், தர்மயுத்தம் தொடங்கி தனி அணியாக செயல்பட்டு வந்தார். இதனால் அவை முன்னவராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.

இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி இரு அணிகளும் சமரசமடைந்து ஒன்றிணைந்த பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றுக் கொண்டார். அதன் பிறகு தற்போது வரை சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவில்லை.

வரும் 8ஆம் தேதி இந்த ஆண்டுக்கான சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து நேற்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் அவை முன்னவர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் விடுவிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக ஓ.பன்னீர்செல்வம் அவை முன்னவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்தில் மதுசூதனன், பன்னீர்செல்வம் அணிக்குச் சென்றதால், அதிமுக அவைத் தலைவர் பதவி செங்கோட்டையனுக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அணிகள் இணைவுக்குப் பிறகு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் சசிகலாவால் நியமிக்கப்பட்டவர்கள் நியமனம் செல்லாது எனவும், ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே பொறுப்பில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் செங்கோட்டையன் வசம் இருந்த அவைத்தலைவர் பதவி பறிபோனது. அணிகள் இணைவுக்குப் பிறகு செங்கோட்டையன் வசம் இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பாலகிருஷ்ண ரெட்டிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இன்னும் சில இலாகாக்களும் மாற்றப்பட்டது.

ஆனாலும் மூத்த தலைவரான செங்கோட்டையனுக்கு அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலோ அல்லது ஆட்சிமன்றக் குழுவிலோ பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இவை அனைத்திலும் செங்கோட்டையன் புறக்கணிக்கப்பட்டார். இருந்தாலும் பொறுமையாக எடப்பாடி அணியில் தொடர்ந்து வருகிறார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 ஜன 2018