மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

நட்சத்திரக் கலை விழாவில் 2.0!

நட்சத்திரக் கலை விழாவில் 2.0!

மலேசியாவில் நடைபெறவுள்ள தென்னிந்திய நட்சத்திரக் கலை விழாவில் 2.0 படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

ரஜினி-ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் படம் 2.0. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகத் தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றதை அடுத்து படத்தின் டீசர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழாவில் நடைபெற இருக்கிறது. இது குறித்த தகவலை நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள இந்த விழாவில் விஷாலின் `இரும்புத்திரை’ படத்தின் இசை வெளியீடு மற்றும் சண்டக் கோழி 2வின் ட்ரெய்லரும் வெளியாக இருக்கிறது. மேலும், விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இசைவெளியீடு மற்றும் விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தின் டீசர், இசை வெளியீடு என முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வெளியீட்டு நிகழ்வும் அங்கு நடைபெற இருக்கிறது.

ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு கமலை இன்னும் நேரில் சந்திக்காத நிலையில் கலை விழாவில் இருவரும் சந்திக்க உள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த மீடியாவின் கவனமும் நட்சத்திரக் கலை விழாவை நோக்கித் திரும்பும் வாய்ப்புள்ளதால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் புரொமோஷனை அந்நிகழ்ச்சியில் நடத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வியாழன் 4 ஜன 2018