மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

குடும்பத்தைக் கொன்று வியாபாரி தற்கொலை!

குடும்பத்தைக் கொன்று வியாபாரி தற்கொலை!

கடலூரில் மனைவி, குழந்தைகளை கொலை செய்துவிட்டு வியாபாரி ஒருவர் தானும் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மனைவி செல்வகுமாரி (ஆறு மாத கர்ப்பிணி) . இவர்களுக்கு அபி என்ற அபிஷயா (7) என்ற மகளும், அபிஷேக் (4) என்ற மகனும் இருந்தனர். இவருக்குக் கடன் தொல்லையும் உள்ளது.

ஆதிமூலம் கேரளாவில் வேலை பார்த்துவந்துள்ளார். தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டுக்கும் கொடுப்பதில்லை. எப்போதும் குடும்பத்தினரிடம் சண்டை போட்டுத் தகராறில் ஈடுபடுவார் என்று கூறப்படுகிறது.

அதுபோன்று ஜனவரி 3ஆம் தேதி மதியம் ஆதிமூலம் வீட்டில் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அவர், கர்ப்பிணி என்றுகூடப் பாராமல் மனைவியையும், குழந்தைகளின் கழுத்தை அறுத்தும் கொலைசெய்துவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆதிமூலம் வீட்டிலிருந்து எந்த வித சத்தமும் இல்லை என்று சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், மாலை 5.00 மணிக்கு, அவரது வீட்டை எட்டிப் பார்த்தபோது நடந்தைக் கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாயினர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் காவல் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த குள்ளஞ்சாவடி காவல் துறையினர் நான்கு பேரின் உடல்களையும் மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகக் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை, குடும்பப் பிரச்சினை காரணமாக ஆதிமூலம் இவ்வாறு செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வியாழன் 4 ஜன 2018