மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ரஜினியுடன் கூட்டணியா? ஹெச்.ராஜா

ரஜினியுடன் கூட்டணியா? ஹெச்.ராஜா

ஆன்மிகம் என்பது மக்களின் இயல்பு என்று கூறியுள்ள பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, ரஜினியின் ஆன்மிக அரசியல் ஏன் இருக்கக் கூடாது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு தொடர்பாக குறிப்பிடும்போது, தான் ஆன்மிக அரசியலை மேற்கொள்ளவுள்ளதாகக் கூறினார். ஆன்மிக அரசியல் என்ற அவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், ஆம்பூரில் நேற்று (ஜனவரி 3) செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச் ராஜா, “தமிழ்நாட்டில் கடவுள் மறுப்பு என்பது அரசியலுக்கான தகுதி என்பதுபோல் நாத்திகத்தை வைத்து அரசியல் நடத்திக்கொண்டிருந்தனர். ஆனால், மக்கள் நாத்திகவாதிகள் அல்ல. நாத்திகம் பேசும் தலைவர்கள் இல்லத்திலேயே அனைவரும் கோயில்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றனர்” என்றார்.

முத்துராமலிங்கத் தேவர் தேசியம், தெய்வீகம் இரண்டும் எனது இரு கண்கள் என்று கூறியுள்ளார். இந்துத்துவா என்பது வாழ்க்கைக்கான நெறிமுறை என உச்ச நீதிமன்றமே தெரிவித்துள்ளது. மக்களின் இயல்புதான் ஆன்மிகம். அதைத்தான் ரஜினியும் கூறியுள்ளார்” என்று ராஜா கூறினா.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018