மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு!

போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு!

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க எதிர்ப்பு தெரிவித்து, ட்ராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன், வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தங்களைக் கேட்காமல் எவ்வித முடிவும் எடுக்கக் கூடாது என்று தீபா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தாங்கள்தான் சட்டபூர்வ வாரிசுகள் என்று உரிமை கோரிய அவர், நினைவிடமாக்கும் முடிவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும், டிசம்பர் 30ஆம் தேதி வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் ஆய்வுப் பணிகள் தொடங்கின. சென்னை கலெக்டர் அன்புச்செல்வன் வீட்டை அளவிடும் பணிகளை ஆய்வு செய்தார்.

இந்நிலையில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக்கும் அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டுமென, சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜனவரி 4) வழக்கு தொடர்ந்துள்ளார். " சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவருக்கு இல்லத்தை அரசு செலவில் நினைவிடமாக்கக் கூடாது" என்று அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு நாளைக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 4 ஜன 2018