மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மகாராஷ்டிரா போராட்டம் வாபஸ்!

மகாராஷ்டிரா போராட்டம் வாபஸ்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வன்முறையைக் கண்டித்து நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தை அம்பேத்கர் அவர்களின் பேரனான பிரகாஷ் அம்பேத்கர், வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.

ஆண்டுதோறும் ஜனவரி 1ஆம் தேதியன்று மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பீமா கோரேகான் நினைவு தூணுக்கு தலித்துகள் ஒன்றுதிரண்டு வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு நினைவு தினத்தன்று இந்துத்துவா அமைப்புகளுக்கும், தலித்துகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் புனேவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த வன்முறையைக் கண்டித்து மகாராஷ்டிராவில் நேற்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு பிரகாஷ் அம்பேத்கர் மற்றும் தலித் அமைப்புகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து மும்பை மற்றும் புனேயில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெருமளவில் போலீசாரும், ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டனர்.

மாநிலத்தின் பல பகுதிகளில் பேருந்துகள் மற்றும் வாகன போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டன. கர்நாடகத்தில் இருந்து மும்பை, புனே நகருக்குச் செல்லும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. மும்பை-புனே இடையே பல இடங்களில் ரயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதில் 150 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. இதனிடையே மும்பையில் கடைகளை அடைக்கக் கோரி மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கலவரம் மேலும் பெருகாமலும், பரவாமலும் தவிர்க்கும் வகையில் முழு அடைப்புப் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக பிரகாஷ் அம்பேத்கர் நேற்று மாலை அறிவித்துள்ளார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 ஜன 2018