மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

தங்கம் இறக்குமதி 67% உயர்வு!

தங்கம் இறக்குமதி 67% உயர்வு!

நிறைவடைந்த 2017ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கம் இறக்குமதி 67 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ஜி.எஃப்.எம்.எஸ். நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் நகை விற்பனை அதிகமாக இருந்ததால் வர்த்தகர்கள் அதிகளவில் தங்கத்தை வாங்கி இருப்பு வைக்கத் தொடங்கினர். இதனால் தங்கம் இறக்குமதி 2017ஆம் ஆண்டில் 855 டன்களாக உயர்ந்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து தங்கம் நுகர்வில் இரண்டாவது மிகப்பெரிய நாடாக உள்ள இந்தியா அதிகளவில் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளதால் சர்வதேச விலை நிலவரம் சீராக இருக்கும் எனவும், தங்கத்தின் மதிப்பு 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு அதிகபட்சமாக 13 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகவும் தாம்சன் ராய்டர்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான ஜி.எஃப்.எம்.எஸ். நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் மூத்த ஆய்வாளரான சுதீஷ் நம்பியாத் கூறுகையில், “2016ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு, நகை விற்பனையாளர்கள் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அதிக தங்கத்தை வாங்கிக் குவித்தனர். டிசம்பர் மாதத்தில் மட்டும் இந்தியா 70 டன் அளவிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது 2016ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறக்குமதியை விட 40 சதவிகிதம் கூடுதலாகும்” என்று தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018