மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஏமாற்றம் அளித்த சாம்பியன்ஸ்!

ஏமாற்றம் அளித்த சாம்பியன்ஸ்!

இந்தியன் சூப்பர் லீக் தொடரில் நேற்று (ஜனவரி 3) நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா,கோவா அணியுடன் மோதியது. இந்த போட்டி சமனில் முடிவடைந்ததால் ரசிகர்கள் அனைவரும் ஏமாற்றமடைந்தனர்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நான்காவது சீசன் கடந்த நவம்பர் மாதம் முதல் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றிரவு கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை, கோவா அணி எதிர்கொண்டது.

போட்டி தொடங்கிய நான்காவது நிமிடமே கொல்கத்தா அணி வீரர் ரோப்பி கேன் முதல் கோல் அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தொடக்கமே அதிரடியான தொடக்கம் வழங்கியதால் கொல்கத்தா அணி வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் முதல் பாதி முடிவதற்குள் கோவா அணியின் ஃபெர்ரன் கொரோமினஸ் (24) ஒரு கோல் அடித்து போட்டியை சமன் செய்தார். இரண்டாம் பாதியிலும் இரண்டு அணிகளும் சமபலம் கொண்டு விளையாடியதால் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனானது. இந்த போட்டியில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா அணி முன்னேறும் என காத்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு கொல்கத்தா அணி பெரும் ஏமாற்றத்தை அளித்தது.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

வியாழன் 4 ஜன 2018