மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ரயில் முன்பதிவு: ஆதார் கட்டாயமில்லை!

ரயில் முன்பதிவு: ஆதார் கட்டாயமில்லை!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயம் இல்லை என ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவையில் இது குறித்த கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த, ரயில்வே அமைச்சர் ராஜென் கோஹெய்ன், "ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம் ஆக்கப்படமாட்டாது. அது தொடர்பான பரிந்துரைகள் எதுவும் எங்களிடத்தில் இல்லை. எனினும் கடந்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் மூத்த குடிமக்கள் சலுகை கட்டணத்தில் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது அதைச் சரிபார்ப்பதற்காக ஆதார் பெறப்பட்டு வருகிறது. அதே நேரம், ஆதார் மற்றும் செல்போன் எண்ணை இணைத்து ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தனிநபர்களுக்கு ஊக்கம் அளிக்கப்படுகிறது.

இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) இணையதளத்தின் வழியாக ஒவ்வொரு மாதமும் தனிநபர் முன்பதிவு செய்யும் டிக்கெட் வரம்பு 12 டிக்கெட்டுகளாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதேபோல் ஐ.ஆர்.சி.டி.சி.யின் பயனாளர் குறியீட்டுடன் ஆதார் இணைப்பைப் பயன்படுத்தி டிக்கெட் எடுப்பவர்களுக்குப் பரிசு அளிக்கும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது" என்று கூறியுள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018