மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மீண்டும் தினகரனுக்கு ஆதரவாக சு.சுவாமி

மீண்டும் தினகரனுக்கு ஆதரவாக சு.சுவாமி

டி.டி.வி.தினகரன் விரைவில் முதல்வராகக்கூடும் என்றும் அதிமுக அணிகளை இணைப்பது நன்று என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜகவைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி எம்.பி, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவான கருத்துகளையே சமீப நாள்களாகத் தெரிவித்துவருகிறார். சசிகலா குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டபோது, “நீதிமன்றத்தில் சசிகலா பற்றிய தகவல்கள் மட்டுமல்லாமல், கருணாநிதி, கனிமொழி மீதான மோசடிகள் தொடர்பான ஆவணங்களையும் அதிகாரிகளிடம் அளித்திருந்தேன். ஏன் இன்னும் சோதனை இல்லை” என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டபோது, “தமிழர்கள் அனைவரும் தினகரனுக்குத்தான் வாக்களிக்க வேண்டும்” என்று ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதேபோல், “ஆர்.கே.நகர் வேட்பாளர்களில் பலர், நான் ஏன் பிறரைவிட ‘பாவியான’ டி.டி.வி.க்கு முன்னுரிமை அளிக்கிறேன் எனக் கேட்கின்றனர். கடவுளான ராமர் ஏன் வாலியை விட சுக்ரீவனுக்கு முன்னுரிமை அளித்தார் எனப் படியுங்கள் என்று கூறினேன்” என்று தினகரனுக்கு ஆதரவளிப்பதற்கான விளக்கத்தை அளித்தார்.

தேர்தலில் வென்ற தினகரன், சுப்பிரமணியன் சுவாமிக்குத் தனது நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஏழு எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை. மெஜாரிட்டிக்கு 117 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 111 பேரின் ஆதரவு மட்டுமே அதிமுகவுக்கு உள்ளது. அதிலும் ஏழு பேர் வராதது அக்கட்சியின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, “தற்போது நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தின் முடிவை வைத்து பார்க்கும்போது எடப்பாடி பழனிசாமி அரசின் வீழ்ச்சி விரைவில் ஏற்படும் என்பது தெரிகிறது. தினகரன் முதல்வராக வாய்ப்புள்ளது. அதிமுக அணிகளை விரைவில் இணைப்பதே நன்று” என்று தினகரனுக்கு ஆதரவாகப் பதிவிட்டுள்ளார். தமிழக பாஜகவையும் அவர் தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 ஜன 2018