மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

காங்கிரஸ் தலைவராக முதல் பயணம்!

காங்கிரஸ் தலைவராக முதல் பயணம்!

காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு ராகுல் காந்தி, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக பக்ரைன் செல்லவுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி கடந்த டிசம்பர் 16ஆம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். அதையடுத்து முதல்முறையாக பக்ரைன் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளார். வெளிநாடு வாழ் இந்தியர்களின் அழைப்பை ஏற்று அரசு விருந்தினராக பக்ரைன் பயணம் மேற்கொள்ளும் ராகுல், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவும் உள்ளார்.

இரண்டு நாள் பயணமாக வரும் 7ஆம் தேதி பக்ரைன் செல்லும் ராகுல், 8ஆம் தேதி நடைபெறவுள்ள மாநாட்டில் கலந்துகொண்டு மறுநாளே இந்தியா திரும்ப உள்ளார். பயணத்தில் பக்ரைன் பிரதமர் காலிபா பின் சல்மானையும், அரச குடும்பத்தினரையும் சந்தித்துப் பேச உள்ளார். இதற்கு முன்னதாக துபாயில் நடைபெற இருந்த என்ஆர்ஐ மாநாட்டில் ராகுல் உரையாற்றுவதாக இருந்தது. ஆனால் அந்தப் பயணம் தள்ளிவைக்கப்பட்டது.

ராகுல் காந்தி கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல், காங்கிரஸ் தலைமையேற்கத் தயார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்! ...

2 நிமிட வாசிப்பு

முதன்முறையாக திருச்செந்தூர் கோயிலுக்குள் புகுந்த மழைநீர்!

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

3 நிமிட வாசிப்பு

ஓடும் ரயிலில் சாகசம்: எஸ்.பி அட்வைஸ்!

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

3 நிமிட வாசிப்பு

புதிய ஆட்சியரின் வாக்குறுதி!

வியாழன் 4 ஜன 2018