மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை!

ரிஸ்க் எடுக்க தயாராக இல்லை!

படத்திற்கு கால்ஷீட் ஒதுக்குவதில் இனி தான் ரிஸ்க் எடுக்கபோவதில்லை என நடிகர் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி, பாகுபலி 2 ஆகிய படங்களில் நடிக்க 5 ஆண்டுகளை ஒதுக்கினார் பிரபாஸ். அந்த 5 ஆண்டுகளில் அவர் வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

இது தொடர்பாக பிடிஐக்கு அளித்த பேட்டியில் பேசிய பிரபாஸ், “பாகுபலி போன்று இனி எந்தப் படத்திற்காகவும் இத்தனை ஆண்டுகளை நான் ஒதுக்குவேனா என்று தோன்றவில்லை. இனி இது போன்ற ரிஸ்க் எடுத்தால் அது என் கேரியரை பாதிக்கும்” எனக் கூறினார்.

38 வயதாகும் பிரபாஸ் இனிவரும் காலங்களில் ஒரே நேரத்தில் அதிகப் படங்களில் நடிக்கத் திட்டமிட்டுள்ளார். “பாகுபலி போன்ற பட வாய்ப்பு வாழ்க்கையில் ஒரு முறைதான் வரும். அதற்குக் கூடுதல் அர்ப்பணிப்பு தேவைப்பட்டது. தற்போது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு ஏற்றது போன்ற படங்களைத் தேர்வு செய்து நடிக்க முயற்சி செய்கிறேன். பாலிவுட் படங்களில் நடிக்க விருப்பம் உள்ளது. இந்தி மட்டும் அல்ல பஞ்சாபி உள்பட எந்த மொழிப் படத்திலும் நடிக்க நான் ரெடி. ஸ்க்ரிப்ட் நன்றாக இருந்தால் எந்த மொழியிலும் நடிப்பேன். மொழி எனக்கு முக்கியம் அல்ல” என்றும் பிரபாஸ் தெரிவித்துள்ளார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வியாழன் 4 ஜன 2018