மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மும்பை: தொடரும் தீ விபத்து!

மும்பை: தொடரும் தீ விபத்து!

மும்பை அந்தேரியைச் சேர்ந்த குடியிருப்புப் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மும்பை புறநகர் மாரோலில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீ அணைப்புத் துறையினர் கடுமையாகப் போராடி, 4.20 மணியளவில் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இந்தத் தீ விபத்தில் சிக்கி 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 4 பேர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் 2 குழந்தைகளும் அடங்கும். மீதம் உள்ளவர்கள் ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மும்பையில் கடந்த ஒரு வாரத்தில் நடந்த இரண்டாவது தீ விபத்து இது. முன்னதாக டிசம்பர் 28ஆம் தேதி நள்ளிரவு கமலா மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 14 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018