மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

நம்பிக்கை அளித்த 2017: காஜல்

நம்பிக்கை அளித்த 2017: காஜல்

விஜய்யின் `மெர்சல்' அஜித்துடன் `விவேகம்’ என 2017ஆம் ஆண்டு திரை உலக பயணத்தில் மிகவும் நம்பிக்கை கொடுத்த ஆண்டாக அமைந்தது என்று கூறியிருக்கிறார் நடிகை காஜல் அகர்வால்.

தமிழ், தெலுங்கு திரை உலகில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்துவருபவர் காஜல் அகர்வால். முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கும் இவர் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். சமீபத்தில் இவர் தன் ட்விட்டர் பக்கத்தில், “2017ஆம் ஆண்டு எனக்கு நம்பிக்கை கொடுத்த வெற்றிகரமான வருடமாக அமைந்தது. தெலுங்கில் மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் நான் நடிப்பேன் என்று நினைத்தே பார்க்கவில்லை. அந்த வாய்ப்பு `கைதி எண்150’ படத்தில் கிடைத்தது. இதையடுத்து ராணாவுடன் `நேனா ராஜு நேனே மந்திரி’ படத்தில் நடித்தேன். தமிழில் விஜய்யின் மெர்சல் அஜித்துடன் விவேகம் படங்களில் நடித்தேன். இப்படி ஒரே ஆண்டில் பல பிரபல ஸ்டார்களுடன் நடித்தேன். எனவே இது எனக்கு சிறப்பான ஆண்டாகும்” என்று தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018