மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

தொடர்கதையாகும் மீனவர்கள் கைது!

தொடர்கதையாகும் மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி வந்ததாகக் கூறி ராமேஸ்வர மீனவர்கள் 13 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் 523 விசைப்படகுகளில் நேற்று (ஜனவரி 3) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தாகக் கூறி வினோ (48), நேதல் (47), வில்பர்ட் (36), ஜான்போஸ் (35), மூக்கன் (34), ஜஸ்டின் (20), மலைச்சாமி (50), ராஜாராம் (45), இன்னாசி (28), ஜேசு (50), மணி (42), மூக்கையா (40), மில்டன் (40) ஆகிய 13 மீனவர்களை 2 படகுகளுடன் கைது செய்துள்ளனர். அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.

சமீபத்தில், இலங்கைச் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 70 மீனவர்களை விடுவித்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு 13 மீனவர்களையும், இன்று 13 மீனவர்களையும் கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதும், சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதையாகிவருகின்றன. “ஒவ்வொரு முறையும் பத்தாயிரம் ரூபாய்க்கும் மேல் செலவு செய்து கடலுக்குள் செல்லும்போதெல்லாம் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்கின்றனர். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018