மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

இந்தியாவிற்குள் சாலை: சீனா முயற்சி முறியடிப்பு!

இந்தியாவிற்குள் சாலை: சீனா முயற்சி முறியடிப்பு!

இந்தியாவுக்குள் அத்து மீறிச் சாலை அமைக்க சீனா மேற்கொண்ட முயற்சியை ராணுவத்தினர் முறியடித்துள்ளனர்.

இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தைச் சீனாவும் உரிமை கொண்டாடிவருகிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே மனக் கசப்பு இருந்து வருகிறது. சமீபத்தில், சிக்கிம் பூட்டான் மற்றும் சீனாவுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டோக்லாம் பகுதியில் சாலை அமைக்கும் பணியை சீனா தொடங்கியது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இருநாட்டு ராணுவமும் டோக்லாம் பகுதியில் குவிக்கப்பட்டன. பின்னர் சமாதானப் பேச்சுக்கள் மூலம் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில், சீனாவைச் சேர்ந்த கட்டுமான குழுவினர் ராணுவ உதவியின்றி அருணாச்சலப் பிரதேசத்திற்குள் சுமார் 1 கிலோமீட்டர் தூரம் வரை நுழைந்துள்ளனர். உள்ளூர் குடியிருப்புவாசிகள் அவர்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து, இது குறித்து இந்தோ- திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்குச் சென்ற இந்தியப் படையினர் அவர்களை எச்சரித்ததுடன் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டனர். அவர்களிடமிருந்து 2 ஜேசிபி இயந்திரங்கள், டேங்கர் வாகனம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன. 12 அடி நீளத்தில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை அமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பவத்தையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் பதில்

இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்த கேள்விக்கு பதிலளித்த சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கெங்க் ஷுவாங், “இந்திய- சீன எல்லை விவகாரத்தில் சீனாவின் நிலை என்பது சீரானது மற்றும் தெளிவானது. அருணாச்சலப் பிரதேசம் என்பதை நாங்கள் எப்போதும் அங்கீகரித்தது இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018