மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

கார்த்திக்கு ஜோடியாக அர்த்தனா

கார்த்திக்கு ஜோடியாக அர்த்தனா

தீரன் அதிகாரம் ஒன்று வெற்றிக்குப் பிறகு கார்த்தி பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளில் ஒருவராக அர்த்தனா ஒப்பந்தமாகியுள்ளார்.

மலையாளத்தில் நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷுடன் சேர்ந்து 'முதுகாவ்' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அர்த்தனா. ஆனால் மலையாளத்தை விட தமிழில் வெளியான சமுத்திரக்கனியின் 'தொண்டன்' படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை தந்தது. அடுத்ததாக ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்துள்ள 'செம' படம் வெளியாக இருக்கிறது.

பாண்டிராஜின் தயாரிப்பில் உருவான 'செம' படத்தில் நடித்ததை தொடர்ந்து, தற்போது அவரது இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். மேயாத மான் நாயகி ப்ரியா பவானி ஷங்கர், வனமகன் படத்தில் நடித்த சாயீஷா ஆகியோர் ஓப்பந்தமாகியுள்ள நிலையில் மூன்றாவது கதாநாயகியாக அர்த்தனா இணைந்துள்ளார். சூர்யா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘2D எண்டர்டெயின்மெண்ட்’ மூலம் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்.

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

3 நிமிட வாசிப்பு

அனுமதியின்றி மண் எடுத்துக் கொள்ளலாம்!

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை ...

11 நிமிட வாசிப்பு

தவறான முடி திருத்தம் - ரூ.2 கோடி இழப்பீடு: தேசிய நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணையத்தின் அதிரடி!

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன் ...

4 நிமிட வாசிப்பு

திங்கள்கிழமை தடுப்பூசி போடப்படாது: செயலாளர் ராதாகிருஷ்ணன்

வியாழன் 4 ஜன 2018