மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஆசீர்வாத அரசியல்!

ஆசீர்வாத அரசியல்!

தனிக்கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் கருணாநிதியை நேற்று (ஜனவரி 3) சந்தித்து ஆசி பெற்றார்.

கடந்த ஆண்டின் கடைசி நாளில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி, தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி என்று அறிவித்தார். அவரது முடிவுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்தையும் எதிர்ப்பையும் மாறி மாறித் தெரிவித்து வருகின்றனர். அரசியல் அறிவிப்புக்குப் பின்னர் பல அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்தாலும் திமுக தலைவர் கருணாநிதியை முதலில் பார்க்க வேண்டும் என்றே அவர் திட்டமிட்டிருந்தார். இதுதொடர்பாக கடந்த 2ஆம் தேதி டிஜிட்டல் திண்ணையில் நாம் குறிப்பிட்டிருந்தோம்.

அதன்படியே, நேற்று இரவு கோபாலபுரம் இல்லத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. கருணாநிதி எனது நண்பர், அவரைச் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைக் கூறவுள்ளேன்” என்று கூறிவிட்டு கோபாலபுரம் இல்லத்தினுள் சென்றார். திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை வரவேற்றார். சுமார் 20 நிமிடங்கள் கருணாநிதியுடன் பேசிய ரஜினி தனது அரசியல் முடிவு குறித்தும் கூறியுள்ளார்.

சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதிக்குப் புத்தாண்டு நல்வாழ்த்துகளைக் கூறி அவரது நலன் குறித்து விசாரித்தேன். பின்னர் எனது அரசியல் பிரவேசம் குறித்துத் தெரிவித்து ஆசீர்வாதம் வாங்கினேன்” என்று பதிலளித்து அங்கிருந்து கிளம்பிச்சென்றார்.

திராவிடத்தை அழிக்க நினைத்தால் தோல்விதான்

இந்தச் சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், “கருணாநிதியைச் சந்தித்து உடல்நலம் விசாரிக்க வேண்டும் என்று ரஜினி என்னிடம் கேட்டார். அவர் கருணாநிதியைச் சந்திப்பது புதிதல்ல. வருகிறவர்களை இன்முகத்தோடு வரவேற்பதுதான் தமிழர் பண்பாடு. அந்த வகையில் கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் ஆகியோரைச் சந்தித்து உடல்நிலை குறித்துக் கேட்டறிந்தார்” என்று தெரிவித்தார்.

‘அரசியல் கட்சி தொடங்குவதால் ஆசீர்வாதம் வாங்க ரஜினி வந்தாரா?’ என்ற கேள்விக்கு, “இருக்கலாம், விஜயகாந்த் புதிய கட்சி தொடங்கும்போதுகூடக் கருணாநிதியைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார். அரசியல் பண்பாட்டு, நாகரிகத்தின் அடிப்படையில் கருணாநிதி அவரை வாழ்த்தியிருக்கலாம்” என்று பதிலளித்தார்.

‘திமுகவின் ஆதரவை ரஜினி கோரினாரா?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, “அவர் எங்களின் ஆதரவைக் கோருவாரா என்பது பற்றி தேர்தல் நேரத்தில்தான் தெரியும். திராவிட இயக்கங்களை அழித்துவிடலாம் என்று பலரின் தூண்டுதலின் அடிப்படையில் ரஜினி கட்சி தொடங்கியுள்ளதாகச் சித்திரிக்கப்படுகிறது. இந்த மண் திராவிட இயக்கத்தின் மண். பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரால் பண்பட்டு இருக்கும் மண். இதை அழிக்க முயன்று பலரும் தோற்றுள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று விளக்கமளித்தார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018