மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சுகாதாரத் துறை திட்டம்: தனி சமூக ஊடக வலைதளம்!

சுகாதாரத் துறை திட்டம்: தனி சமூக ஊடக வலைதளம்!

மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் குறும்படங்களைத் திரையிடத் தனித்துவமான சமூக ஊடக வலைதளத்தை (ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப்) சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கான தனித்துவமான சமூக ஊடக வலைதளமான ஃபேஸ்புக், டிவிட்டர், யூடியூப் ஆகியவை உருவாக்கப்பட்டிருந்தது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு தகவல்கள் மற்றும் குறும்படங்கள் திரையிட அரசு திட்டமிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இத்திட்டங்கள் குறித்த 15 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று (ஜனவரி 3) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், “மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் நலத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் அதிகரிக்கவும், புதிய திட்டங்களைத் தெரிவிக்கவும் இந்தச் சமூக ஊடக வலைதளம் பயன் உள்ளதாக இருக்கும். மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையின் சாதனைகளைத் தெரிவிக்கவும், பொது மக்களுக்கு எழும் சுகாதாரம் குறித்த சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ளவும் பயனுள்ள வகையில் இந்தச் சமூக ஊடக வலைதளம் தொடங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் பொது மக்களுக்கு, சுகாதாரம் குறித்து தெரிந்துகொள்ளவும், கருத்துகளைத் தெரிவிக்கவும் மற்றும் கேள்விகளை எழுப்பவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சமூக ஊடக வலைதளத்தில் பொதுமக்களால் எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதற்காக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறையின் உயர் அலுவலர்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட உள்ளது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வியாழன் 4 ஜன 2018