மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

பொங்கலுக்கு 11,983 சிறப்புப் பேருந்துகள்!

பொங்கலுக்கு 11,983 சிறப்புப் பேருந்துகள்!

பொங்கல் பண்டிகைக்காக 11,983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று (ஜனவரி 3) அறிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் சிஎம்டிஏ, நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் எட்டு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர்கள் பங்கேற்றனர்.

அதைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11, 12, 13 ஆகிய தேதிகளில் 11,983 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு ஜனவரி 9ஆம் தேதி முதல் தொடங்கும். இதற்காக 29 சிறப்பு முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும். மேலும், கோயம்பேடு தவிர சென்னை அண்ணாநகர், பூந்தமல்லி, சைதாப்பேட்டை, தாம்பரம் பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அதற்காகத் தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆந்திரா செல்லும் பேருந்துகள் அண்ணாநகர் பேருந்து நிலையில் இருந்தும், கிருஷ்ணகிரி வழியாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும், விக்கிரவாண்டி வழியாக இயக்கப்படும் பேருந்துகள் தாம்பரத்தில் இருந்தும், ஈசிஆர் வழியாக செல்லும் பேருந்துகள் சைதாப்பேட்டையில் இருந்தும் இயக்கப்படும். மற்ற ஊர்களுக்கு கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

வியாழன் 4 ஜன 2018