மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

எச்-1பி விசா: அமெரிக்காவின் அடுத்த அதிரடி!

எச்-1பி விசா: அமெரிக்காவின் அடுத்த அதிரடி!

எச்-1பி விசாவை நீட்டிப்பதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, “அமெரிக்கர்கள் அமெரிக்கப் பொருள்களையே வாங்க வேண்டும், அமெரிக்கர்களுக்கே வேலை வழங்க வேண்டும்” என்ற முழக்கத்தை முன்வைத்து ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க அதிபராக அவர் பொறுப்பேற்றது முதலே அமெரிக்க அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்திலும் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை அளித்து வருகிறது.

இதனால் அமெரிக்காவுக்குப் பணிபுரிய செல்லும் வெளிநாட்டவர்களுக்கு அந்நாட்டு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் நேற்று (ஜனவரி 3) எச்-1பி விசாவை நீட்டிப்பதற்கும் தடை விதித்துள்ளதாக மெக்லட்சி டிசி பீரோ என்ற அமெரிக்கச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் நிரந்தரமாக வசிப்பதற்கு கிரீன்கார்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும் வரையிலும் அமெரிக்காவில் வசிப்பதற்கு எச்-1பி விசாவை நீட்டித்துக்கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால், எச்-1பி விசாவை நீட்டிப்பதற்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தடை விதித்துள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் அமெரிக்காவில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

எச்-1பி விசாவில் ஏற்படும் முறைகேடுகளைத் தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அரசு தரப்பிலிருந்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்! ...

3 நிமிட வாசிப்பு

சென்னை புறநகர் ரிங் ரோடு திட்டத்தைப் பெற்றுள்ள டாடா நிறுவனம்!

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் பணி!

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

3 நிமிட வாசிப்பு

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைத் திறக்க ஆணையம் அதிரடி!

வியாழன் 4 ஜன 2018