மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

பாடகர் ஸ்ரீநிவாஸ் கைது?

பாடகர் ஸ்ரீநிவாஸ் கைது?

பாலியல் வன்முறை சம்பந்தமான புகாரில் பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் கைது செய்யப்பட்டதாகப் புகைப்படத்துடன் இந்தியா டைம்ஸ் இணையதளப் பத்திரிகை செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் பாடகர் ஸ்ரீநிவாஸ். இவர் சமீபத்தில் பாலியல் வன்முறை சம்பந்தமான புகாரில் கைது செய்யப்பட்டதாக இந்தியா டைம்ஸ் இணையதளப் பத்திரிகை இவரது புகைப்படத்துடன் செய்தி ஒன்றை வெளியிட்டது.

உண்மையில் நடந்தது என்னவென்றால் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றும் பெண்ணைப் பாலியல் தொந்தரவு செய்ததாக 51 வயதான தெலுங்கு பாடகர் ‘கஜல்’ ஸ்ரீநிவாசனை ஹைதராபாத் போலீஸார் நேற்று கைது செய்தனர். இவர் காந்தியத்தை அனைத்து நாடுகளுக்கும் தெரியப்படுத்தும் வகையில் 125 உலக மொழிகளில் காந்தியத்தை கஜலில் பாடினார். இதன்மூலம் இரண்டுமுறை கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் ஒருமுறை லிம்கா சாதனைப் புத்தகத்திலும் இடம்பிடித்தவர்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018