மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மார்ச் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்?

மார்ச் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்?

உள்ளாட்சித் தேர்தலுக்கான தொகுதி மறுவரையறை செய்வதற்கான பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் வரும் மார்ச் மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 2016ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று முடிவடைந்தது. அதனால் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பும் 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு சரியாகப் பின்பற்றவில்லை என்று கூறி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு மே 14ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. ஆனால், வாக்காளர் பட்டியல் தயாரிக்கவில்லை என்று மாநிலத் தேர்தல் ஆணையம் கூடுதல் அவகாசம் கேட்டது. பிறகு தொகுதிகளை மறுவரையறை செய்வதற்கு தேர்தல் ஆணையம் அவகாசம் கேட்டது. இதுபோன்று தேர்தல் ஆணையம் பலமுறை நீதிமன்றத்தில் அவகாசம் கோரியுள்ளது.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்கான இறுதிக்கட்ட பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 2011ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்கள் கணக்கெடுப்பின்படி மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன. மக்களின் ஆட்சேபனை, கருத்துகள் சொல்ல வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்றுடன் முடிவதாக இருந்தது. தற்போது அது வருகிற 5ஆம் தேதி வரை நீட்டித்து அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு இட ஒதுக்கீடு அடிப்படையிலான வார்டு வரையறைகள் முடிவுக்கு வரும்.

வார்டுகளின் எண்ணிக்கைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என்று அறிவித்துள்ள தேர்தல் ஆணையம், 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை மறுவரையறை செய்துள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018