மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

இந்தியா வருகிறார் கிறிஸ்டோபர் நோலன்

இந்தியா வருகிறார் கிறிஸ்டோபர் நோலன்

திரையுலகம் வியந்து போற்றும் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் ஒரு மாதத்தில் இந்தியா வருகிறார்.

உலகம் வியந்து போற்றுகிறது என்று சொல்வது சாதாரணமாக இருப்பதாக அவரது ரசிகர்கள் வருத்தப்படலாம். இன்னும் என்ன வேண்டுமென்றாலும் சொல்லலாம் என்று நினைக்கலாம். அவை எல்லாவற்றுக்கும் பொருத்தமானவர் நோலன். உலகமே கிராஃபிக்ஸ், வேற்று உலகம் என்று சென்றுகொண்டிருக்கும்போது டங்கிர்க் என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார். இதைவிடவும் அந்தப் படத்தை ஃபிலிம் ரோலில் எடுத்திருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு.

தமிழில் கடைசியாக ஃபிலிமில் எடுத்த திரைப்படம் ‘தனி ஒருவன்’. கிட்டத்தட்ட அதன் முதல் பாதி வரை இந்தியாவில் மீதமிருந்த ஃபிலிம் ரோலில் எடுத்திருந்தார் மோகன் ராஜா. அதற்குப்பிறகு ஃபிலிம் ரோல் கிடைக்காததால் டிஜிட்டலில் எடுத்ததாகக் கூறினார். மோகன் ராஜாவுக்கு மட்டுமல்ல. இன்னும் எத்தனையோ இயக்குநர்களுக்கு ஃபிலிம் ரோல் கிடைத்தால் மேலும் சிறப்பாக படம் எடுக்கலாம் என்ற எண்ணம் இருந்தது. இதற்குக் காரணம், ஃபிலிம் ரோலிம் படமெடுக்கும்போது கிடைக்கும் கலர் ஒரிஜினாலிட்டி மற்றும் காட்சியின் டெப்த் (Depth) & டீட்டெயிலிங் (Detailing) என்கின்றனர்.

உலகம் டிஜிட்டலுக்கு மாறிவிட்ட பிறகும், தனித்துவமான உணர்வைக் கொடுக்க ஃபிலிம் ரோல் தேடி அலைந்தவர்களுக்கெல்லாம் புகலிடமாக, மும்பையில் உருவாகவிருக்கிறது கோடாக் (Kodak) நிறுவனத்தின் உற்பத்தித் தொழிற்சாலை. இதைத் திறந்து வைக்க கிறிஸ்டோபர் நோலன் ஒரு மாதத்தில் வரக்கூடும் என்று தெரிவித்திருக்கிறார் அமிதாப் பச்சன். ஹாலிவுட் ஃபிலிம் ரோலுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. நமது டிஜிட்டல் உலகம் என்னவாகும்? என்று ட்விட்டரில் அமிதாப் கூறியிருக்கிறார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018