மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

தென்னாப்பிரிக்காவைச் சமாளிக்குமா இந்தியா?

தென்னாப்பிரிக்காவைச் சமாளிக்குமா இந்தியா?

இந்திய - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (ஜனவரி 5) கேப் டவுன்னில் தொடங்குகிறது.

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. கடந்த ஆண்டு ஒரு தொடரிலும் தோல்வியைச் சந்திக்காத இந்திய அணி தொடர்ச்சியாக ஒன்பது தொடர்களைக் கைப்பற்றியதால் டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணியும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாகப் பல வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்திய அணியைப் பொறுத்தவரை ஷிகர் தவன் மற்றும் முரளி விஜய் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் வெளியூர் மைதானங்களில் அதிக அனுபவம் உடையவர்கள். தவன் அணியில் இடம்பெறாமல் போகும்பட்சத்தில் கே.எல்.ராகுல் அவரது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். எனவே தொடக்கம் சிறப்பாக அமைக்க இந்திய அணி வீரர்கள் தயாராக வேண்டும்.

அவர்களைத் தொடர்ந்து இந்திய அணியின் நம்பிக்கை நாயகன் சித்தேஷ்வர் புஜாரா களமிறங்கி சிறப்பாக விளையாடுவார் என ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை உள்ளது. ஏனெனில் இந்திய அணியின் தற்போதைய டிராவிட் என அவரை ரசிகர்கள் அனைவரும் அழைத்து வருகின்றனர். அந்த அளவுக்கு அவரது டெஸ்ட் பேட்டிங் மிகவும் சிறப்பாக உள்ளது. அவரைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் நிலைத்து நின்று விளையாடினால் இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்ட வாய்ப்புள்ளது.

தென்னாப்பிரிக்க மைதானம் பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் அதைச் சமாளித்து தென்னாப்பிரிக்க அணிக்கு சவால் விடுவார்களா என பொறுத்திருந்துதான் காண வேண்டும்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018