மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஆள்பவர்களை ஆட்டம் காண வைத்த வெற்றி!

ஆள்பவர்களை ஆட்டம் காண வைத்த வெற்றி!

‘ஆர்.கே.நகரில் பெற்ற வெற்றி, தமிழகத்தை ஆள்பவர்களை ஆட்டம் காண வைத்த வெற்றி’ என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தினகரன் நேற்று, தண்டையார்பேட்டை இரட்டைக் குழி வீதியில் உள்ள எம்.எல்.ஏ. அலுவலகத்துக்குச் சென்று தனது பணியைத் தொடங்கினார். ஆர்.கே.நகரில் நிலவும் குடிநீர் பிரச்னையைச் சரி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் கடிதம் எழுதினார்.

பின்னர், தேர்தலில் வெற்றி பெற வைத்ததற்காக அப்பகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார். வழி நெடுகிலும் இருந்த மக்கள், தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து அவரிடம் முறையிட்டனர். அதைக் கேட்டுக்கொண்ட அவர், நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

பின்னர் பேசிய அவர், “ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்த உங்களுக்கு நன்றி. ஜெயலலிதா தற்போது இல்லையென்றாலும் அவரது இடத்தில் நீங்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். என்னென்ன வாக்குறுதிகளை அளித்தேனோ அதை நிச்சயம் நிறைவேற்றுவேன். 57 ஆயிரம் ஏழைகளுக்கு வீடு கட்டி தருவேன். கழிவுநீர் கலக்காத குடிநீர் கிடைக்க செய்வேன். உங்களுக்குத் தேவையானதை அரசாங்கத்திடம் போராடி பெற்றுத் தருவேன். தேர்தலில் வெற்றி பெற்றதும் இந்தத் தொகுதி பக்கம் நான் வரமாட்டேன் என்று பொய் பிரசாரம் செய்தார்கள்.

ஆனால், உங்களில் ஒருவனாக இருந்து தேவைகளை நிறைவேற்றுவேன். நீங்கள் அளித்துள்ள வெற்றி தமிழகத்தில் பெரிய அரசியல் மாற்றத்தைத் தரும். இந்தியத் துணைகண்டம் உற்று நோக்கிய வெற்றி இது.

இந்த வெற்றியின் மூலம் தமிழகத்தில் ஆள்பவர்கள் ஆட்டம்கண்டு விட்டனர். 20 ரூபாய் நோட்டைக் கொடுத்து நான் வெற்றி பெற்றுவிட்டதாகவும், மக்கள் என்னைத் தேடிக்கொண்டு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

ஆனால், எம்.ஜி.ஆர் - ஜெயலலிதாவின் வழித்தோன்றல்கள் நாங்கள்தான் என்பதை இந்த வெற்றி தமிழகத்துக்கு எடுத்துகாட்டியுள்ளது” என்று குறிப்பிட்டார்.

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வியாழன் 4 ஜன 2018