மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

சீன ரசாயனத்துக்கு இறக்குமதி குவிப்பு வரி?

சீன ரசாயனத்துக்கு இறக்குமதி குவிப்பு வரி?

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில வேதியியல் பொருள்களுக்கு இந்தியா இறக்குமதி குவிப்பு வரி விதிக்க வாய்ப்புள்ளது.

சீனாவிலிருந்து அளவுக்கு அதிகமாக ‘சல்பனேட்டேடு நாப்தலின் ஃபார்மால்டிஹைடு’ இறக்குமதி செய்யப்படுவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். எனவே இறக்குமதியைக் கட்டுப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியாளர்களைக் காக்க வேண்டுமென்று ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் நிறுவனம் இறக்குமதி குவிப்பு வரி மற்றும் இதர வரிகளுக்கான பொது இயக்குநரிடம் (டி.ஜி.ஏ.டி.) முறையிட்டது.

வர்த்தக அமைச்சகத்தின் ஒரு பிரிவான டி.ஜி.ஏ.டி இதுகுறித்து விரிவான ஆய்வை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. சல்பனேட்டேடு நாப்தலின் ஃபார்மால்டிஹைடு சீனாவிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்யப்படுகிறது என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டதில் இறக்குமதி அதிகளவில் இருப்பதும் இதனால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு இறக்குமதி குவிப்பு வரியை விதிக்கவும் பரிந்துரைத்துள்ளது. இதையடுத்து சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சல்பனேட்டேடு நாப்தலின் ஃபார்மால்டிஹைடு வேதிப்பொருளுக்கு இறக்குமதி குவிப்பு வரி விதிக்கப்படவுள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018