மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

மக்கள் பாடம் புகட்டுவார்கள்!

மக்கள் பாடம் புகட்டுவார்கள்!

ரஜினியின் அரசியல் வருகையை ஆதரித்து வந்த திருமாவளவன், தற்போது ரஜினிக்கு மக்கள் உரிய நேரத்தில் உரிய பாடம் புகட்டுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

தான் அரசியலுக்கு வரப்போவது உறுதி எனவும், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், சாதி, மதச் சார்பற்ற ஆன்மிக அரசியலே தனது நோக்கம் என்றும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியில் அறிவித்திருந்தார்.

ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு முதல் ஆளாக வரவேற்பு தெரிவித்தவர் விசிக தலைவர் திருமாவளவன். ‘சாதி மதச் சார்பற்ற என்னும் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து ரஜினிக்குப் பின்னால் சாதியவாதிகளோ, மதவாதிகளோ இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறார். அந்த வகையில் ரஜினியின் அரசியல் வருகையை விசிக வரவேற்கிறது’ என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று (ஜனவரி 3) செய்தியாளர்களின் சந்திப்பின்போது ரஜினியின் அரசியல் குறித்து திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, “சினிமா கவர்ச்சிக்கு அரசியலில் மார்க்கெட் உள்ளது என்று நினைக்கிறார்கள். தமிழக அரசியல் களத்தை சினிமா மார்க்கெட்டுக்கு சிறந்த சந்தை என்று நம்புகிறார்கள். அரசியலுக்கு வரட்டும் மக்கள் உரிய நேரத்தில் உரிய பாடம் புகட்டுவார்கள்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ரஜினியின் அரசியல் வருகைக்கு திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துவந்த நிலையில் தற்போது அதற்கு முற்றிலும் முரண்படும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில், “முத்தலாக் என்பது மூன்று முறை இடைவெளிவிட்டு தலாக் சொல்லும் மரபுதான் இஸ்லாமிய சமூகத்தில் இருந்து வருகிறது. ஆனால், ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லப்படுவதாகவும், இதிலிருந்து இஸ்லாமியப் பெண்களைப் பாதுகாக்கவே முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றும் மத்திய அரசு கூறுகிறது. இது தேவையற்ற சமூகப் பதற்றத்தை உண்டுசெய்கிற முயற்சியாகும். முத்தலாக் தடை சட்டத்தைக் கொண்டுவர மோடி அரசு ஏன் இவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பினார் திருமாவளவன்.

“தமிழகத்திலுள்ள கட்சிகள் மட்டுமின்றி இந்தியாவிலுள்ள ஜனநாயக சக்திகள் அனைத்தும் முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இந்த தடைச் சட்டத்தை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்கிறது. தங்களின் கருத்தை முழுமையாக அறிந்த பிறகு முடிவெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றன. எனவே இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் முத்தலாக் தடை சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்ற கோரிக்கையையும் விடுத்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வியாழன் 4 ஜன 2018