மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

பியூட்டி ப்ரியா

பியூட்டி ப்ரியா

பெண்ணின் பார்வையில் எப்படி ஆண்கள் விழுகிறார்களோ... அவ்வாறே பெண்களும் ஆண்களைப் பார்த்து ரசிக்கிறார்கள், சிரிக்கிறார்கள். ஆனால், வெளியில் தெரிவதில்லை, காட்டிக்கொள்வதில்லை அவ்வளவே.

ஆண்கள் வசீகரத் தோற்றத்தோடு காணப்படுவதற்கு உடற்கட்டும் முகத்தின் களையுமே பிரதானம்.

ஆண்களுக்கான சில டிப்ஸ் இதோ...

உடலில் உள்ள நச்சுகள் நீங்கவும், உடல் பொலிவாக இருப்பதற்கும் பழச்சாறுகள் துணைபுரிகின்றன. தினமும் இரண்டு அல்லது மூன்று பழச்சாறுகள் அருந்திவந்தால், உடல் புத்துணர்வு அடைவதுடன் பொலிவும் கிடைக்கும்.

தர்பூசணி ஜூஸ், வெள்ளரி ஜூஸ், ஆரஞ்சு ஜூஸ், புதினா ஜூஸ், எலுமிச்சை ஜூஸ், ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் போன்றவை அருந்தலாம்.

ரோஜா இதழ்களை இரவிலேயே ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். காலையில் எழுந்து ரோஜாவில் ஊறவைத்த தண்ணீரில் குளித்தால், உடல் முழுவதும் நறுமணம் வீசும். உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும். தோல் பொலிவடையும்.

ஆண்கள் சூடான உடல்வாகு கொண்டவர்கள், தினமும் குளித்த பின்னர் புதினா இலைகளை தண்ணீருடன் சேர்த்து கொதிக்கவைத்து நன்றாக ஆறிய பின்னர், பருத்தித் துணி அல்லது பஞ்சு எடுத்து புதினா தண்ணீரில் நனைத்து உடல் முழுவதும் தடவிக்கொள்ள வேண்டும். இது, உடலில் வியர்வை துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும்.

உடற்பயிற்சிக்கு ஈடாக ஆரோக்கியமான உணவும் உடல் கட்டமைப்பை மெருகேற்ற உதவுகிறது. இப்போது அழகான உடல் கட்டமைப்பைப் பெறுவதற்கு எந்த உணவுகளையெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.

பருப்பு வகை:

சரியான உடல் கட்டமைப்பு வேண்டுமானால், பருப்பு வகையைக் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் வளமையான புரதச்சத்து, அதிமுக்கிய வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துகள் உள்ளதால், தசைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்

முட்டை:

உடல் கட்டமைப்பை ஏற்ற நினைப்பவர்கள் கண்டிப்பாக முட்டை சாப்பிட வேண்டும். இதில் வைட்டமின் ஏ, டி, ஈ, கோலைன், நல்ல கொழுப்பு மற்றும் புரதச்சத்துகள் அதிக அளவில் உள்ளன.

பாலாடைக்கட்டி:

உடல் கட்டமைப்பை ஏற்ற விரும்புபவர்களுக்குப் பாலாடைக்கட்டி ஒரு வரப்பிரசாதமே. இதில் பால் மற்றும் மோரின் புரதம் அதிக அளவில் உள்ளது.

வேர்க்கடலை:

புரதச்சத்து, வைட்டமின்கள், மக்னீசியம், நார்ச்சத்து, போலேட் (folate) மற்றும் அர்ஜினைன் (arginine) போன்றவை நிறைந்தது வேர்க்கடலை. இதை அளவாக எடுத்துக்கொண்டால், இதய தசைகளை மேம்படுத்தி, கொழுப்பைக் குறைக்க உதவும்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 ஜன 2018