மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

உள்ளே வெளியே 2: களமிறங்கும் பார்த்திபன்

உள்ளே வெளியே 2: களமிறங்கும் பார்த்திபன்

தமிழ் சினிமாவில் தற்போது முந்தைய படங்களின் தொடர்ச்சியாக அதன் இரண்டாம் பாகத்தைப் படமாக்கி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகர் பார்த்திபனும் களமிறங்கியுள்ளார்.

முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் மட்டுமல்லாது திரைக்கதை மூலமும் ரசிகர்களைக் கவர்ந்த படங்களின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் பாணி தற்போது உருவாகி இருக்கிறது. முன்னணி இயக்குநர்கள் அந்தப் பாணியை கையில் எடுத்திருக்க நடிகரும் இயக்குநருமான பார்த்திபனும் அந்த முயற்சியில் இறங்கியுள்ளார். பார்த்திபன் நடித்ததோடு தானே தயாரித்து இயக்கியிருந்த படம் ‘உள்ளே வெளியே’. 1993இல் வெளியான இந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்தப் படத்துக்கான தயாரிப்பாளர்களைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள பார்த்திபன் அதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். “மலேசிய நாட்டுக்கோர் நற்செய்தி! 5, 6, 7 தேதிகளில் நடிகர்கள் சங்க விழாவுக்கும் என் அடுத்த படமான ‘உள்ளே வெளியே-2’ படத்துக்கான தயாரிப்பாளர்களை உறுதி செய்யும் பணிக்காகவும் வருகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பின் மூலம் இரண்டாம் பாகப் படங்களை இயக்குபவர்கள் பட்டியலில் பார்த்திபனும் இடம்பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வியாழன் 4 ஜன 2018