மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால், பெண்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாகப் பெண்கள் நிலக்கடலையைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நிலக்கடலையை நாள்தோறும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். அவ்வப்போது வீட்டில் நிலக்கடலை வாங்கி சாப்பிடுவது நன்மை தரும்.

எப்போதும் நிலக்கடலையை மட்டுமே சாப்பிட்டாலும் அலுத்துப்போகும். சிலருக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். அதனால் காராமணிப் பயறுடன் சேர்த்துக் கூட்டுச் செய்தும் சாப்பிடலாம். நிலக்கடலை – காராமணிக் கூட்டு செய்வது எப்படி என்பதை இன்று பார்க்கலாம்.

தேவையானவை: நிலக்கடலை – அரை கப் (2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்), காராமணி – ஒரு கப், புளி – எலுமிச்சை அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: காராமணியையும் நிலக்கடலையையும் ஒன்றாக வேக வைக்கவும். புளியைத் தண்ணீர்விட்டு கெட்டியாகக் கரைத்து இதில் ஊற்றி, அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். சிறிது எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.

கீர்த்தனா சிந்தனைகள் :

சமூக வளைதளங்கள் எதிரொலி... ரஜினி மன்ற லோகோவில் இருந்து தாமரை நீக்கம்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

3 நிமிட வாசிப்பு

சேலைகளைத் துவைக்க உத்தரவு: நீதிபதிக்குத் தடை!

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

3 நிமிட வாசிப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு!

வியாழன் 4 ஜன 2018