மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

பாலா இயக்கத்தில் ஷ்ரத்தா?

பாலா இயக்கத்தில் ஷ்ரத்தா?

பாலா இயக்கத்தில் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘நாச்சியார்’ படத்தை பாலா தற்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. சமீபத்தில் வெளியான டீசரில் ஜோதிகா பேசிய வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கிடையே தெலுங்கில் வெற்றிபெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ரீமேக் செய்யும் வேலைகளில் தீவிரம் காட்டிவருகிறார் பாலா. இதில், நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இதன் ஆரம்பக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இதில் துருவ்வுக்கு ஜோடியாக விக்ரம் வேதா நாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் ...

3 நிமிட வாசிப்பு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த நான்கு நாட்கள் சிறப்பு முகாம்!

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு! ...

5 நிமிட வாசிப்பு

பெட்ரோல், டீசலுக்கு ஜிஎஸ்டி: நாளைய கவுன்சில் கூட்டத்தில் முடிவு!

வியாழன் 4 ஜன 2018