மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

இந்தியப் பொருளாதாரம் 7.6% வளரும்!

இந்தியப் பொருளாதாரம் 7.6% வளரும்!

வரும் ஆண்டுகளில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் எனவும், 2019-20ஆம் ஆண்டில் 7.6 சதவிகித வளர்ச்சியை எட்டும் எனவும் ஹெச்.எஸ்.பி.சி. தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹெச்.எஸ்.பி.சி. வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘பணமதிப்பழிப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையால் நடப்பாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவிகிதமாகவே இருக்கும். எனினும், வளர்ச்சி விகிதம் 2018-19 நிதியாண்டில் 7 சதவிகிதமாகவும் 2019-20 நிதியாண்டில் 7.6 சதவிகிதமாகவும் உயரும். பணவீக்கத்தைப் பொறுத்தவரையில் 2017-18 நிதியாண்டில் 3.4 சதவிகிதமாக இருக்கும். எனவே ரிசர்வ் வங்கி தனது ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணமதிப்பழிப்பின் தாக்கம் சீராகி நாட்டின் முன்னணி துறைகள் மேம்பட்டு வருவதால் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகமாகவே இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பொருளாதார ஆலோசனை நிறுவனமான டக்லஸ் மெக்வில்லியம்ஸ், 2018ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களின் பட்டியலில் இங்கிலாந்து மற்றும் ஃபிரான்ஸ் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்துக்கு முன்னேறும் என்று தனது ஆய்வறிக்கையில் தெரிவித்திருந்தது.

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்? ...

3 நிமிட வாசிப்பு

போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள்: முதலிடத்தில் எந்த நகரம்?

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

4 நிமிட வாசிப்பு

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 50,000 இழப்பீடு!

வியாழன் 4 ஜன 2018