மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

முதலிடத்தைப் பிடித்த தங்கல்!

முதலிடத்தைப் பிடித்த தங்கல்!

ஆமிர் கான் நடித்த 'தங்கல்' திரைப்படம் சீனாவின் ஐஎம்டிபி நிறுவனத்தில் முதலிடம் பிடித்துள்ளது.

சீனாவின் ஐஎம்டிபி நிறுவனம் வருடத்திற்கு ஒருமுறை உலகம் முழுவதும் வெளிவரும் திரைப்படங்களை ஆராய்ந்து, தரவரிசைப்படுத்தி உலகளாவிய அளவில் முதலிடம் பிடிக்கும் படத்தை வெளியிடும். இதனையடுத்து நித்திஷ் திவாரி இயக்கத்தில் 2016ஆம் ஆண்டில் டிசம்பர் 23 அன்று மஹாவீர் சிங் போகட் மற்றும் அவரின் மகள்கள் கீதா, பப்பித்தா ஆகியோரின் வாழ்க்கை தங்கல் என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் அமெரிக்கா, கனடா, லண்டன், ஆஸ்திரேலியா, அரேபிய நாடுகள், தாய்வான் உள்ளிட்ட பல நாடுகளில் வெளியாகி வெற்றி பெற்றது. தங்கல் வசூல் உலக அளவில் ரூ 2,000 கோடியைக் கடந்துவிட்டதாகக் கடந்த ஜூலையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து சீனாவின் ஐஎம்டிபி எனும் பிரபல நிறுவனத்தின் தரவரிசையில் தங்கல் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதனால் அந்த படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சியோடு உள்ளனர். சீனாவின் தரவரிசையில் முதல் இடம்பிடித்து இந்திய திரையுலகினருக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் இது அமைந்துள்ளது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வியாழன் 4 ஜன 2018