மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை!

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை!

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட 55 வருவாய் கிராமங்களுடன் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 67 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, மொத்தம் 122 வருவாய் கிராமங்களுடன் 426 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 3 வருவாய் கோட்டங்கள், 16 வட்டங்களை உள்ளடக்கிய பெருநகர சென்னை மாநகராட்சி எல்லைக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டத்தை இன்று(ஜனவரி 4) தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி. உதயகுமார்,ஓ.எஸ்.மணியன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அதன்படி, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம், தண்டையார்ப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு, வடசென்னை கோட்டம் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, மாதவரம், பெரம்பூர், புரசைவாக்கம் ஆகிய 5 வட்டங்களுடன் 32 வருவாய் கிராமங்கள் உள்ளன.

அம்பத்தூரைத் தலைமையிடமாகக் கொண்டு மத்திய சென்னை கோட்டம் அம்பத்தூர், அயனாவரம், அமைந்தகரை, மதுரவாயல், மாம்பலம், எழும்பூர் ஆகிய 6 வட்டங்களுடன் 47 வருவாய் கிராமங்கள் உள்ளன.

கிண்டியைத் தலைமையிடமாகக் கொண்டு தென் சென்னை கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய 5 வட்டங்களுடன் 43 வருவாய் கிராமங்கள் உள்ளன.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முதல் கட்டமாகத் தமிழகத்திலுள்ள 21 மாவட்டங்களைச் சார்ந்த 43 வட்டங்களுக்குரிய 24.11 லட்சம் கணினிப்படுத்தப்பட்ட நிலஅளவை புலவரைபடங்களை http://eservices.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாகப் பொதுமக்கள் பதிவிறக்கம் செய்துகொள்ள இணையவழிச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்கள் மருத்துவ வசதிகள், மாவட்ட வேலைவாய்ப்பகங்களில் பதிவு, கல்வி தொடர்பான பணிகள், பேரிடர் மேலாண்மை தொடர்பான அரசின் நலத்திட்ட உதவிகள், தேர்தல் தொடர்பான பணிகள், சட்டம் மற்றும் ஒழுங்கு சார்ந்த பணிகள், சமூக பாதுகாப்புத் திட்டங்கள், நிலம் தொடர்பான பணிகள் மற்றும் நலத்திட்டங்களை எளிதில் விரைவாகப் பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வியாழன் 4 ஜன 2018