மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 4 ஜன 2018

ஹெல்த் ஹேமா

ஹெல்த் ஹேமா

எண்ணெயில் என்ன ஆரோக்கியம்?

ரீபைண்ட் ஆயில் மற்றும் கடைகளில் விற்கப்படும் நல்லெண்ணெய் முதல் அனைத்து எண்ணெய்களிலும் நிறைய கலப்பட எண்ணெய்கள் இருக்கின்றன. தற்போது புதிது புதிதான நோய்களுக்கு இவை மிகப்பெரிய காரணமாகிறது.

முன்பெல்லாம் சமையலுக்குக் கடலை எண்ணெய், நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். அதுவும் செக்கில் ஆட்டிய எண்ணெய்களைப் பயன்படுத்தினர். இது, இயற்கை குணம் மாறாமல் எல்லா சத்துகளையும் அளித்திட வல்லது.

நல்லெண்ணெயில் ஜிங்க் என்னும் கனிமச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது எலும்புகளில் கால்சியம் அதிகம் இருக்குமாறு பார்த்துகொள்ளும்.

எனவே, எலும்புகள் வலுவுடன் இருக்க வேண்டுமெனில் கால்சியம் உணவுகளுடன் நல்லெண்ணெயையும் சாப்பிடுவது நல்லது. அதிலும் இந்த எண்ணெயைப் பெண்கள் அதிகம் சாப்பிடுவது மிகவும் நல்லது.

கடலை எண்ணெயிலும் மருத்துவக் குணங்களும் நிறைய சத்துக்களும் அடங்கியுள்ளன.

கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

வியாழன் 4 ஜன 2018