மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுமா?

சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்படுமா?

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணம் ரத்து செய்யப்படுவது பற்றி உறுதியாகக் கூற இயலாது எனவும், மக்களுக்குத் தலைசிறந்த சேவைக் கிடைக்க வேண்டுமென்றால் அவர்கள் அதற்காகக் குறிப்பிட்ட தொகையைச் செலுத்தித்தான் ஆக வேண்டும் எனவும், மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சரான நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சுங்கக் கட்டணங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு இசைந்துள்ள நிதின் கட்கரி, இப்போதைக்கு ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார். வாகனங்களின் சிறப்பான பயணத்துக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவதற்கும் சாலைப் பராமரிப்பு மிகவும் இன்றியமையாதது என்று கூறும் கட்கரி, உலகம் முழுவதும் இதற்குக் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருப்பதாகக் காரணம் கூறுகிறார். சாலைகள் சரியாக இருந்தால் தான் விபத்துகள் குறையும் என்றும் அதற்காகக் கட்டணம் வசூலிக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்றும் அவர் வாதிடுகிறார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

புதன் 3 ஜன 2018