மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 3 ஜன 2018

என்னுடைய அணு ஆயுதம்தான் சக்தி வாய்ந்தது!

என்னுடைய அணு ஆயுதம்தான் சக்தி வாய்ந்தது!

தன்னிடம் இருக்கும் அணு ஆயுதத்தை ஏவுவதற்கான பட்டன், வடகொரிய அதிபரிடம் இருப்பதை விட மிகவும் சக்தி வாய்ந்தது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜோங்உன் தனது புத்தாண்டுச் சிறப்புரையில், "அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் தொடர்பான சோதனைகளை வடகொரியா ஏற்கனவே முடித்துவிட்டது.அணு ஆயுதங்களை ஏவுவதற்கான ஸ்விட்ச் எனது மேஜையில் தயாராக உள்ளது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து வட கொரியாவைக் காப்பாற்றிக்கொள்வதற்கான பாதுகாப்பு அரணாக அணு ஆயுதங்கள் உள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று (ஜனவரி 3) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், "வடகொரியா அதிபர் கிம் தன் மேஜையின் மீது அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பொத்தான் தயாராக இருக்கிறது என்று கூறியுள்ளார். அவரிடம் யாராவது கூறுங்கள், என்னிடமும் அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பொத்தான் உள்ளது. அது அவரிடம் உள்ளதைவிட மிகப் பெரியது, அதிக சக்தி வாய்ந்தது. மேலும் அது இயங்கும் தன்மையில் உள்ளது" என்று பதிலடி கொடுத்துள்ளார்.

நேற்று தென்கொரியா, வடகொரியாவை அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது. ஆனால் ஐநாவுக்கான அமெரிக்க தூதர் அணு ஆயுத சோதனைகளை நிறுத்தும்வரை வடகொரியாவுடன் தென்கொரியா பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

புதன் 3 ஜன 2018